search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் கருகி பலி"

    • தீ எதிர்பாராத விதமாக இந்துமதி சேலை மீது பட்டு வேதனையால் அவர் அலறினார்.
    • வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் அமராவதி நகர், மகாத்மா டெக்ஸ் தெருவை சேர்ந்தவர் இந்துமதி (24). இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முருகேசன் கட்டிட கூலி தொழிலாளி.

    இந்நிலையில் சம்பவ த்தன்று மதியம் 12 மணி அளவில் இந்துமதி வீட்டில் சமைப்பதற்காக மண்ணெ ண்ணைய் ஸ்டவ்வை பற்ற வைத்த போது ஸ்டவ்வில் இருந்து தீ எதிர்பாராத விதமாக இந்துமதி சேலை மீது பட்டு வேதனையால் அவர் அலறினார்.

    அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்துமதியை சிகிச்சை க்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 2 கை, வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்துமதி அனுமதிக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த இந்துமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பிடித்துள்ளது.
    • மூதாட்டி தங்காள் தீ விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில், கவுண்ட ன்பாளையம் சக்தி நகர் காலனியை சேர்ந்தவர் குண சேகரன். இவர் பெருந்துறை யில் உள்ள சிப்காட் நிர்வாகத்தில் சி.சி.டி.வி. கேமிரா ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் தங்காள் (60). மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த ஒரு வருடமாக தங்காள் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் தனது மனைவியுடன் வெள்ள கோவிலில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் மூதாட்டி தங்காள் மட்டும் இருந்துள்ளார்.

    பின்னர் திடீரென மூதாட்டி வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மூதாட்டி தங்கிருந்த வீடு குடிசை வீடாகும். இதனால் விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பிடித்துள்ளது. மூதாட்டியால் எழுந்திருக்க முடியாததால் அவரும் தீ விபத்தில் சிக்கிக்கொண்டார்.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்த போது மூதாட்டி தங்காள் தீ விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி தங்காள் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தீப்பிடித்து சங்கமேஸ்வரன் உடல் கருகினார்.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகேஉள்ஓடத்துறை நரிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (82). ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. இவரது மனைவி சரஸ்வதி (66).

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு சங்கமேஸ்வரன் ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். மற்றவர்கள் அருகில் இருந்த மற்றொரு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது ஓட்டு வீட்டில் தீப்பிடித்து சங்கமேஸ்வரன் உடல் கருகினார். இதுப்பற்றி தெரியவந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்.

    அப்போது வீட்டில் உடல் கருகி இறந்த நிலையில் சங்கமேஸ்வரன் மீட்கப்பட்டார்.

    • சேலம் பழைய சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பத்மாவதி.
    • அங்கு 2 நாட்கள் பணிபுரிந்த நிலையில், ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் எனது மகன் உட்பட இந்தியாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

    சேலம்:

    சேலம் பழைய சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பத்மாவதி. இவர் இன்று தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது மகன் சீதாராமன், சவுதி அரேபியாவில் ரியாத் என்ற பகுதிக்கு பெட்ரோல் என்ஜினீயர் பணிக்காக, கடந்த திங்கட்கிழமை சேலத்தில் இருந்து மும்பை வழியாக சவுதி அரேபியாவிற்கு சென்றார்.

    அங்கு 2 நாட்கள் பணிபுரிந்த நிலையில், ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் எனது மகன் உட்பட இந்தியாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அதில் எனது மகன் உட்பட 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

    மகன் சவுதி அரேபியாவுக்கு சென்று ஒரு வாரத்திற்குள்ளே தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் நேற்று தான் எங்களுக்கு தெரியவந்தது.

    எனது மகன் உடல் எப்போது தமிழ்நாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை. எனவே மாவட்ட கலெகடர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எனது மகனின் உடலை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பட்டு உடல் முழுவதும் பரவத் தொடங்கியது
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த காளிங்க ராயன் பாளையம், கவுந்த ப்பாடி ரோடு பாரதிநகரை சேர்ந்தவர் அன்னை பவானி (64). மகளுடன் வசித்து வருகிறார்.

    மகள் வீட்டின் மேல் தளத்திலும் அன்னை பவானி கீழ்த ளத்தில் வசித்து வந்தார். அன்னை பவானியின் கணவர் பூபதி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். கணவரின் புகைப்படத்திற்கு தினமும் அன்னைபவானி விளக்கேற்றி பூ வைத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்றும் வழக்கம் போல் காலை அன்னை பவானி கணவரின் புகைப்படத்திற்கு விளக்கு ஏற்றி பூ வைத்து வழிபட்டார்.

    விளக்கேற்றி விட்டு பூ போட்டு கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பட்டு உடல் முழுவதும் பரவத் தொடங்கியது. வேதனையால் அன்னை பவானி அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஊற்றி தீயை அனைத்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அன்னை பவானி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • தனம்மாள் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார்.
    • மூதாட்டி தனம்மாள் சம்பவஇடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    கோவை,

    கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள மீனாட்சி நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி தனம்மாள் (வயது 75).

    இவர் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார். தனம்மாளை அவரது மகள் ஜெயசித்ரா என்பவர் கவனித்து வந்தார்.மூதாட்டிக்கு கொசு கடிக்காமல் இருக்க அவரது படுக்கைக்கு அருகில் கொசு வர்த்தியை பற்றி வைப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு ெஜயசித்ரா தனது தாயின் படுக்கைக்கு அருகே கொசு வர்த்தியை பற்ற வைத்து விட்டு சென்றார். நள்ளிரவு தனம்மாள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது கொசு வர்த்தி சுருள் படுக்கையின் மீது விழுந்தது.

    கண்இமைக்கும் நேரத்தில் படுக்கையில் தீ பிடித்து படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி மீதும் தீ பரவியது. இதில் உடல் கருகிய மூதாட்டி தனம்மாள் சம்பவஇடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து அவரது மகள் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடல் கருகி இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சகுந்தலா வீட்டின் பின்புறம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை காய வைத்து கொண்டு இருந்தார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி கொண்டது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பா ளையம் வடக்கு சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சகுந்தலா (வயது 85). கோவிந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், 5 மகள்கள் உள்ளனர். மகன் வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று மதியம் சகுந்தலா வீட்டின் பின்புறம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை காய வைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி கொண்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது உறவின ர்கள், அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சகுந்தலாவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சகுந்தலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக மண்எண்ணை சுடிதாரில் பட்டு தீப்பிடித்தது.
    • சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் வாய்க்கால் மேடு எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சந்திரன் (52). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மூத்த மகள் சரண்யா (32). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சரண்யா, ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டு பெரியசேமூர் அடுத்த மாயாபுரம் ராஜீவ் நகரில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை ரவி வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். சரண்யா சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக மண்எண்ணை அவரது சுடிதாரில் பட்டு தீப்பிடித்து கொண்டது. இதனால் வலி தாங்காமல் சரண்யா அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ரவி எழுந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தகவல் தெரிவித்து சரண்யாவை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி டிரைவர் பஸ்சைஅதிவேகமாக ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டதாக உயிர் தப்பிய பயணிகள் கூறியுள்ளனர்.
    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது பஸ் மோதியதில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த 13 பேர் ஜன்னலை உடைத்துக்கொண்டு கீழே குதித்து உயிர்தப்பினர்.

    இந்தவிபத்து குறித்து உயிர்தப்பிய பயணிகள் கூறியதாவது:-

    பஸ் சென்னையில் இருந்து புறப்பட்டபோதே பஸ்சின் டிரைவர் பஸ்சை அதிவேமாக ஓட்டி சென்றார். இதனால் நாங்கள் அச்சத்துடன் பயணம் செய்தோம்.

    சில பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் லாரி மீது பஸ் டமார் என்று மோதியது. சிறிது நேரத்தில் லாரியும், பஸ்சும் தீ பிடிக்க தொடங்கியது.

    இதில் நாங்கள் அனைவரும் கூச்சல் போட்டு அலறினோம். பின்னர் ஜன்னலை உடைத்து கீழே குதித்து உயிர்தப்பினோம். பஸ் டிரைவர் வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது.

    ஆம்னி பஸ் டிரைவர்கள் அனைவரும் மின்னல்வேகத்தில் ஓட்டிசெல்வதால் விபத்து ஏற்படுகிறது. எனவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். வேகமாக ஓட்டும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    அஜீஸ்நகர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள வளைவு பகுதியில் செல்லும்போது பஸ் டிரைவர்கள் அதிவேகமாக செல்கிறார்கள். இதனால் டிரைவர்களின் கட்டப்பாட்டை இழந்து பஸ்கள் விபத்துக்குள்ளாகிறது.

    மேலும் அந்த பகுதியில் மின்விளக்கும் எரிவதில்லை. இதனால் இரவில் வரும் வாகனங்கள் அந்த பகுதியில் விபத்தில் சிக்கிக்கொள்கிறது.

    எனவே அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும். மேலும் ஆம்னி பஸ்களை வேகமாக ஓட்டி வரும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதிய விபத்தில் தீ பிடித்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் மதுரை நோக்கி புதுவை பதிவு எண் கொண்ட என்.எல்.எல். என்ற ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 26 பயணிகள் இருந்தனர். மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த டிரைவர் அலெக் சாண்டர் (வயது 59) பஸ்சை ஓட்டி சென்றார்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ் நகர் என்ற இடத்தில் நள்ளிரவு 1.30 மணி அளவில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அரியலூரில் இருந்து ஆந்திரா மாநிலம் நெல்லூரை நோக்கி சிமெண்ட் ஏற்றிய டேங்கர் லாரி வளைவில் திரும்பியது.

    கண்இமைக்கும் நேரத்தில் வேகமாக சென்ற பஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் டீசல் டேங்க் டமார் என்று பயங்கர சத்ததுடன் வெடித்தது.

    இதனால் பஸ்சும், லாரியும் திடீரென்று தீ பிடிக்க தொடங்கியது. தூங்கி கொண்டிருந்த பயணிகள் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பஸ் தீப்பிடித்து எரிவதை பார்த்து கூச்சல் போட்டனர்.


    பயணிகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். பஸ் முழுவதும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. உள்ளே இருந்தவர்கள் கூக்குரல் போட்டு அலறினர். பின்னர் சிலர் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதன் வழியாக கீழே குதித்தனர்.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 3 பேர் மற்றும் டேங்கர் லாரி டிரைவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    1) ஆம்னி பஸ் டிரைவர் அலெக்சாண்டர் (53), அலங்காநல்லூர், மதுரை.

    2) சக்திவேல் (58), பஸ் டிரைவரின் உதவியாளர், பராசக்தி நகர், மதுரை.

    3) மோனிஷா (23)விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை.

    4) லாரி டிரைவர் முருகன் (53), நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி.

    இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேரையும் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

    காயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1) செல்வநாயகி (60), செங்கல்பட்டு.

    2) தமிழ்ச்செல்வன் (30), புதுக்கோட்டை.

    3) கேசவன் (30), மதுரை.

    4) தியாகு (28), மதுரை.

    5) வைதேகி (56), மதுரை உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மங்கலம்பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×